கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி)!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள  தெருவிளக்குகள் எரியாததால், தோப்பு சாலை இருளில் மூழ்கியுள்ளது.
கடற்கரை ஈத்கா மைதானம் - தோப்பு சாலையில் உள்ள (ஈத்கா மைதானம் முதல் தோப்பு வளைவு வரை) சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு தெரு விளக்குகள் எரியவில்லை.

எனவே பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பள்ளிகூடங்கள், மதரஸாக்களில் டியூசன் முடித்து விட்டும், அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து வருபவர்களும் மேலும் அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

கடற்கரை - தோப்பு சாலையில் கலர் கம்பெனி மற்றும் ஏராளமான குடியிருப்பும் உள்ளன. இப்பகுதியிலும் சில மாதங்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை.

கோபாலப்பட்டிணத்தில் இது போன்று பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால், இருளில் நடக்க மக்கள் பயப்படுகிறார்கள்.

மேலும் மழை காலம் என்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் தெருவில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோபாலப்பட்டிணத்தில் எரியாத தெருவிளக்குகளை உடனடியாக பழுதுபார்த்து புதுப்பிக்கும்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், தெருவிளக்குகள் எரிய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments