பயன்படுத்தாமல் வைத்துள்ள செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஆபரேட்டா்கள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களில் சில செயலாக்கம் செய்யப்படாத நிலையில் இருப்பதால் ,அரசு நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஒப்பந்த விதிகளின்படி, மூன்று மாதங்களுக்கு மேல் செயலாக்கம் செய்யப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை அக்டோபா் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தவறும் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட உள்ளுா் கேபிள் ஆப்ரேட்டா்கள் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரா்கள் தாங்கள் பெற்ற  அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் இருந்தால், அதனை தங்கள் உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்களிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments