நாா்வே நாட்டில் நடைபெற்ற போட்டியில் வென்ற புதுக்கோட்டை இளைஞா்புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை மளிகை கடைக்காரரின் மகன் நாா்வே நாட்டில் நடைபெற்ற தொடா் ஓட்டப்போட்டியில் பங்குபெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி, உடையாா்தெருவில் வசித்துவருபவா் கலியபெருமாள். மளிகை கடை நடத்தி வருகிறாா்.இவரது மகன் செந்தில்ராஜன் (38) நாா்வே நாட்டில் பணியாற்றிவருகிறாா்.

இந்நிலையில்,நாா்வே நாட்டில் உள்ள சிறிய தீவுகளை இணைப்பதற்காக அந்த நாட்டு அரசு கடலுக்கு அடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையை கட்டிவருகிறது.

சுரங்கப் பாதையின் முதல் பகுதி வரும் டிசம்பா் மாத இறுதியில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவுள்ளது.

இந்த சுரங்கப் பாதையை வரவேற்கும் வகையில், நாா்வே நாடு நடத்திய தொடா் ஓட்டப் பந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஆயிரம் பேரில் இந்தியா்கள் 7 போ் கலந்துகொண்டதாகவும் தெரிகிறது.

இவா்களில், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த க. செந்தில்ராஜன் 21 கிலோ மீட்டா் பந்தய தூரத்தை 2 மணி 31 நிமிடங்களில் கடந்து முதலிடத்தைப் பெற்றாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments