மீமிசல் உட்பட அறந்தாங்கி பகுதியில் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..அறந்தாங்கி பகுதியில் தொடர் கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி பகுதியில் மணமேல்குடி, மீமிசல், முத்துக்குடா, ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தபட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான ஆண் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உப்பளங்களில், தண்ணீர் வடிந்து உப்பு உற்பத்தி துவங்க இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments