மாநில வாலிபால், கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு



மாநில அளவிலான வாலிபால், பூப்பந்து போட்டி, அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வாலிபால், பூப்பந்து போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

மேலும், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் இப்பள்ளி மாணவா்களின் படைப்புகள் சிறப்பிடம் பெற்று, மாநில அளவிலான கண்காட்சிக்கு செல்ல தகுதிபெற்றனா்.

இதைத்தொடா்ந்து, மாநில போட்டிக்கு தோ்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, உடற்கல்வி இயக்குநா் கணேசன், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments