கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி 19.10.2019 நடைபெறும் இடம் மாற்றம்..புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்

GPM மக்கள் மேடை சார்பாக மற்றுமொறு கனவு திட்டமான மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வருகின்ற 19.10.2019 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் GPM  மக்கள் மேடை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது சில நாட்களாக கோபாலப்பட்டிணத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் மூன்று நாளைக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் GPM மக்கள் மேடை ஆலோசனை குழு கவனத்தில் கொண்டு அவசர கால ஊர்தி அர்ப்பணிப்பு விழாவின் இடத்தை கிழக்கு கடற்கரை சாலை SP மடத்தில் உள்ள  MKR ராசி திருமண மஹாலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

தகவல்: ஆலோசனை குழு 4, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments