கோபாலப்பட்டிணத்தில் ஜமாத்தார்கள் & GPM பொது நல சேவை சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு டெங்கு தடுப்பு மருத்துவ முகாம்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி,
மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் 18.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் & GPM பொது நல சேவை சங்கம் ஏற்பாட்டில் அரசு சார்பாக இலவச சிறப்பு டெங்கு தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோபாலபட்டினம் ஜமாஅத் தலைவர் ஜனாப் செய்யது முகம்மது அவர்கள் தலைமை ஏற்று துவக்கிவைத்தார்கள். மேலும் ஜமாத்தார்கள் மற்றும் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டெங்கு தடுப்பு முகாமில் சுமார் 100 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு  இரத்த பரிசோதனை செய்தனர். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மருந்து, மாத்திரைகள், பெற்று கொண்டனர்.

இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மேலும் மாரிக்குமார் (Non Medical Supervisor) மருத்துவர் அவர்கள் டெங்கு தடுக்கும் முறைகளையும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முக்கிய ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

கோபாலப்பட்டிணம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து, பிளிசிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

முகாமை உடனடியாக ஏற்பாடு செய்த கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் மற்றும் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகளுக்கும், வருகை தந்த மருத்துவ குழுவினருக்கும் GPM MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்:  A. அமீர்


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments