புதுக்கோட்டை மாவட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகள் தொடர்பான புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு..!



கிராம ஊராட்சி பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகள் தொடர்பான புகார்களை பொது மக்கள் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைது வங்கியுள்ள நிலையில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் சுகாதார கேடுகளால் கொசுகள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் தொடர்பான புகார்களை ஏற்கனவே குடிநீர் மற்றும் தெருவிளக்கு தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட விவரப்படி தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்னவாசல் 18004259014, அறந்தாங்கி 18004259015, அரிமளம் 18004259016, ஆவுடையார்கோவில் 18004259017, கந்தர்வக்கோட்டை 18004259018, கறம்பக்குடி 18004259019, குன்றாண்டார்கோவில் 1800 425 9020, மணமேல்குடி 1800 425 9021, பொன்னமராவதி 1800 425 9022, புதுக்கோட்டை 1800 425 9023, திருமயம் 1800 425 9024, திருவரங்குளம் 1800 425 9025, விராலிமலை 1800 425 9026 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், குடிநீர், தெருவிளக்குகள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் தேங்கிகிடக்கும் குப்பைகள் தொடர்பாக ஊராட்சி ஒன்றியங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதன் விவரத்தினை மாவட்ட அளவில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்  1800-425-9013-ல் புகார் தெரிவித்திடவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குடிநீர், தெருவிளக்குகள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் தேங்கிகிடக்கும் குப்பைகள் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments