தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக 100-வது இரத்ததான முகாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையில் 100-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் (193) மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் (175) நபர்கள் இரத்ததானம் செய்தனர். மருத்துவமனையின் இரத்தப் பற்றாக்குறை மற்றும் அவசர தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம் தேதிக்கு நாட்கள் குறைவாக இருந்தாலும் நமது சகோதரர்களின் உழைப்பால் அதிகமான மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று விழிப்புணர்வு செய்ததின் விளைவாக தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமில்லாமல், பிற மாநில மற்றும் பிற நாட்டு சகோதரர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ்!

இது குறித்து சுமைஸி இரத்த வங்கியின் இயக்குனர் டாக்டர். இப்ராஹிம் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யக்கூடிய இந்தப் பணி மிகவும் மகத்தானது. மருத்துவமனையில் இரத்தப் பற்றாக்குறை உள்ளது என்று எப்பொழுது தெரிவித்தாலும், எந்த ஒரு எதிர்பார்ப்பையும் எதிர்நோக்காமல் உடனடியாக இரத்தம் வழங்குவதற்கான முகாம்களை ஏற்படுத்தி குருதி பற்றாக்குறையை சரி செய்ய வழி செய்கிறார்கள் தமிழம், இந்தியாவை சார்ந்த இவர்களது இந்தப் பணி மென்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.

ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. அஹமது முக்தார் அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மூலம் கடந்த 12 வருடங்களில் இதுவரை 99 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதற்குரிய நற்கூலியை இறைவனிடத்தில் மட்டுமே எதிர்பாக்கிறோம். ஆனால் நாங்கள் செய்கின்ற சமூக மற்றும் மனிதநேயப் பணியை பாராட்டி, அதற்குரிய அங்கீகாரமாக சவுதி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனைகள் சார்பாகவும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம்.

இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவத்தின் நோக்கத்தை சொல்வதென்றால், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை தவிர வேறெதுவுமில்லை. இன்னும் முத்தாய்ப்பாக சொல்வதென்றால்.

“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” - அல் குர்ஆன் 5:32

என்ற அல்குர்ஆன் வசனத்தை நடமுறைப்படுத்தி, அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் மனித நேயத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக்கூடியவர்கள் என்றும், ஏக இறைவனிடத்தில் மட்டும் இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், முஸ்லீம்கள் மீதும் சுமத்தப்படும் தவறான களங்கத்தை போக்கிடவும் அனைத்து சமய சகோதரிகளிடமும் இணக்கத்தை ஏற்படுத்தும் இந்த மகத்தான பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகக் கூறினார்.

இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகள் - கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கும், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனை இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments