பெண் நுரையீரலை செயல்பட வைத்து சிவகங்கை அரசு மருத்துவர்கள் சாதனை..!



சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு நோய் தொற்று ஏற்பட்டு செயலிழந்த நுரையீரலை மீண்டும் இயங்க செய்து, டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சிவகங்கை அருகே நாலுகோட்டை கார்த்திக் மனைவி ரம்யா 26. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். அப்போது கால் வீக்கம்,ரத்த அழுத்தம் அதிகம் இருந்தது. மாத்திரை கொடுத்து, கர்ப்பிணியை சீரான நிலைக்கு கொண்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அக்.,20 ல் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு மறுநாள் ரம்யாவிற்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சோதனையில் இடது நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டு, நுரையீரல் செயலிழந்து வந்ததை அறிந்தனர். டீன் குழந்தைவேல், கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) முகமது ரபி ஆகியோரின் ஆலோசனைப்படி, மகப்பேறு மருத்துவ துறை தலைவர் மல்லிகா, துணை பேராசிரியர்கள் காயத்ரி, பிரசன்னலட்சுமி மற்றும் மயக்கவியல், நுரையீரல் நிபுணர்கள் துணையுடன் சிகிச்சை அளித்தனர்.

தற்போது அப்பெண்ணுக்கு நுரையீரலில் இருந்த நோய் தொற்று நீங்கி, செயலிழந்த நுரையீரலை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து மகப்பேறு பிரிவினர் சாதனை புரிந்துஉள்ளனர்.

'ட்ரக்யாஸ்டமி' மூலம் ஆக்சிஜன்மகப்பேறு துறை தலைவர் மல்லிகா கூறியதாவது:

 அப்பெண்ணிற்கு நுரையீரல் செயலிழந்ததை அறிந்து மயக்கவியல், நுரையீரல் நிபுணர்கள் ஆலோசனைபடி செயற்கை சுவாசம் அளித்தோம். பின்னர் தொடர்ந்து சிறந்த மருந்து வழங்கியதில், நோய் தொற்று விலகியது. பின்னர் மூச்சு பெருங்குழாயில் ஓட்டை போட்டு (ட்ரக்யாஸ்டமி) அந்த ஓட்டை மூலம் ஆக்சிஜன் செலுத்தினோம்.

18 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. அதற்கு பின் ஓட்டை மூலம் செலுத்திய ஆக்சிஜனை எடுத்ததும், இயல்பு நிலைக்கு திரும்பி தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர், என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments