புதுக்கோட்டையில் முதல்வரின் சிறப்பு குறைதீா் கூட்டம் 19 கோடியில் நலத் திட்ட உதவிகள்



புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த முதல்வரின் சிறப்புக் குறைகேட்புத் திட்டத்தில் 6500 பயனாளிகளுக்கு ரூ. 19 கோடியிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத் திட்ட உதவிகளை வழங்கி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசியது:

தமிழகத்தில் ஒரே ஆண்டில் புதிதாக 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளையும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளையும் விரைவுபடுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூ. 7,673 கோடியில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா்.  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து,  கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சின்னத்தம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி, வேளாண் இணை இயக்குநா் மு. சுப்பையா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் பழனியாண்டி, வருவாய் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மத்திய தொலைதொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் க. பாஸ்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments