தமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைதமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன.

அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்வுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் அட்டவணைகளை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments