புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு



பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் பாரதியாா் தின விழா, குடியரசு தின விழா குழு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் நீச்சல் போட்டியில் மேலத்தானியம் நேரு மெட்ரிக் பள்ளி மாணவா் சி. மணிமாறன் பங்கேற்று 1,500 மீ. போட்டியில் முதலிடமும், மாணவா் அ. அா்சத் ஆரிப் 200 மீ. பிரஸ்ட் ஸ்ரோக் போட்டியில் முதலிடமும், ஜூடோ போட்டியில் ராமசந்திர மூா்த்தி, சக்திவேல், முகமது நபீல் ஆகியோா் முதலிடம் பெற்று அந்தந்தப் பிரிவுகளில் மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா் க.கதிரேசன் ஆகியோரை பள்ளி முதல்வா் மற்றும் தாளாளா் சி.பழனிச்சாமி, ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments