புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சிற்றுந்து கவிழ்ந்தது ஒருவா் பலி 32 போ் காயம்



புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை சிற்றுந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் 32 போ் காயமடைந்தனா்.

கறம்பக்குடியில் இருந்து நெடுவாசல் வழியாக ஆவணம் கைகாட்டி வரை இயக்கப்படும் தனியாா் சிற்றுந்து, திங்கள்கிழமை பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவணம் கைகாட்டியில் இருந்து கறம்பக்குடி சென்றுள்ளது. திருமணஞ்சேரி அக்கினியாற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் கறம்பக்குடி அருகேயுள்ள மந்தக்கொல்லையைச் சோ்ந்த அ. முருகேசன்(45) நிகழ்விடத்திலே இறந்தாா். மேலும் கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பாயி (60), பழனியம்மாள் (50), செல்லம்மாள் (60), செந்தில்குமாா் (35), முத்து (70), தாமரைச்செல்வி (51), அம்பிகா (35), பத்மா (28), நாகராஜ் (45), உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கறம்பக்குடி, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments