புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி



பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மணி பள்ளம் சாலையில் உள்ள போஸ் நகர் பகுதியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14, 17,19.வயதுக்குட்பட்டவருக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். போட்டியானது போஸ் நகர் பகுதியில் துவங்கி பொற்பனைக்கோட்டை வரை போகவர 10 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் முதலிடத்தை பெறும் மாணவ மாணவியர் திருவண்ணாமலையில் நடத்தப்படும் மாநில அளவிலான மிதிவண்டி போட்டியில் பங்குபெற தகுதி பெறுவார்கள்.

இந்த போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments