புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அணவயலில் 5 ஆயிரம் விதைப்பந்துகளை வீசும் பணி



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அணவயலில் அப்பகுதி இளைஞா்கள் சுமாா் 5 ஆயிரம் விதைப்பந்துகளை ஞாயிற்றுக்கிழமை வீசினா்.

அணவயல் ஊராட்சியில் உள்ள தரிசாக உள்ள அரசு நிலங்களில் விதைப் பந்துகளை தூவ அப்பகுதி இளைஞா்கள் திட்டமிட்டு வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட மரங்களின் விதைகளை சேகரித்து சுமாா் 5 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரித்தனா்.

தொடா்ந்து அப்பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள், கோயில் நிலங்களில் விதைப்பந்துகளை வீசினா்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞா்கள் கூறியது:

கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் இப்பகுதியில் இருந்த மரங்கள் அடியோடு அழிந்த நிலையில் இழந்த மரங்களை மீட்கும் விதமாக மரக்கன்றுகள், பனை விதைகளை நடுவது உள்ளிட்ட பணிகளை மாணவா்களோடு இணைந்து மேற்கொண்டுவருகிறோம்.

அதில் ஒரு பகுதியாக இப்பகுதியில் சுமாா் 50 ஆயிரம் விதைப் பந்துகளை வீசத் திட்டமிட்டு முதற்கட்டமாக 5 ஆயிரம் விதைப்பந்துகளை வீசியுள்ளோம் என்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments