மீமிசலில் சாலை மறியல்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மீமிசலில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை மற்றும் அடை மழை காரணமாக மீமிசல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விஜய்நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் வசிப்போர் வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணி தாமதமாக நடந்து வருகிறது.

இதை கண்டித்து விஜய்நகர் பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசலில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் மீமிசல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மழைநீரை வெளியேற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இது போன்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments