காரைக்குடியில் ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை..



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பர்மா காலனியில் செயல்படும் மீன்கடை ஒன்றில் நேற்று ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலை முதலே அப்பகுதியைச் சேர்ந்த அசைவ பிரியர்கள் கடையை முற்றுகையிட்டனர்.

கடை திறப்பு விழா சலுகையாக நேற்று ஒரு நாள் மட்டுமே முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்தார். 100 பேருக்கு மேல் வரும் அடுத்த 100 பேர்களுக்கு 'டிபன்பாக்ஸ்' கிப்ட் வழங்கினார். இதனால் சலுகை விலையில் மீன்களை வாங்க, வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு வழங்கியது ஏன் என்று கடை உரிமையாளர் பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல். நான் காரைக்குடியில் இன்று முதல் மீன்கடை தொடங்கியுள்ளேன். மீமிசல் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அன்றே கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ளோம். மற்ற கடைகளில் விற்பது போல் பனிக்கட்டியில் வைத்து விற்பனை செய்யமாட்டோம்.

புதிதாக மீன்கடை தொடங்கப்பட்டுள்ளதை காரைக்குடி மக்கள் அறியவும், அவர்களது மனதில் இடம்பிடிக்கவும் அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்பனை செய்கிறோம் என்பதை எடுத்துக்கூறவுமே இன்று எங்கள் கடைக்கு வந்த முதல் 100 பேருக்கு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கினோம். அதன் பின்னர் வந்தவர்களுக்கு லாபம் இல்லாமல் கொள்முதல் விலையில் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments