புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ..! மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..புதுக்கோட்டை மாவட்ட ஊரகவளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


புதுக்கோட்டை மாவட்ட ஊரகவளர்ச்சி அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை, நிரப்பிடும் பொருட்டு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து 25.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3, இனச் சுழற்சி வ.எண் 2, இனச்சுழற்சி விவரம் ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் ஆதரவற்ற விதவை- பெண்கள்), காலிப்பணியிட எண்ணிக்கை 1, இனச் சுழற்சி வ.எண் 10, இனச்சுழற்சி விவரம் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள் தவிர - முன்னிரிமையற்றவர்) காலிப்பணியிட எண்ணிக்கை 1, இனச் சுழற்சி வ.எண் 11, இனச்சுழற்சி விவரம் பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்), காலிப்பணியிட எண்ணிக்கை 1.

வயது & சம்பளம்:
வயது 01.07.2019 அன்று, ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விகிதம் (Pay Matrix) : ரூ.15700-50000 (Level-1).

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்பப் படிவம் ஏதும் தனியே வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமைக்கான நகலினையும் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் பரிசீலனையின்போது விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்களை 25.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), வளர்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை - 622005. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

அஞ்சலக தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. தேர்வு அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது. தேர்வு நாள், தேர்வு நேரம் மாறுதலுக்குட்பட்டது. தேர்வுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. நேர்காணல் அழைப்பு தகுதியான விணணப்பதாரர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments