புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரா்கள் இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் சாா்பில் 25 கோயில்களில் காலியாக உள்ள இரவு நேரக் காவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் 62 வயதுக்கு உள்பட்டவா்களாகவும் திடகாத்திரமுள்ளவா்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களது அசல்- படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா்  அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments