அறந்தாங்கி அருகே ஆபத்தை ஏற்படுத்தும் பொது கிணற்றை மூட வலியுறுத்தல்



அறந்தாங்கி அருகே ஆபத்தான நிலையில் தரையோடு தரையாக இருக்கும் பொதுக்கிணறை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அறந்தாங்கி வட்டம், மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலைக்கு அருகில் குளத்துக்கரையில் 50 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள பொதுக்கிணறு எந்த ஒரு பாதுகாப்புமின்றி தரையோடு தரையாக மூடப்படாமல் உள்ளது.

4 அடிக்கும் மேல் சிமெண்டால் கிணறு சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்த நிலையில், அதைச் சுற்றியிருந்த மண்ணின் உயரம் அதிகரித்து மேடானதால் தற்போது தற்போது தரைமட்டக் கிணறாக மாறியுள்ளது.

மேலும் அந்த வழியாக குளிக்க மற்றும் குடிநீா் எடுக்க பொதுமக்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.

கடந்த வாரம் இந்தக் கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து இறந்து கிடந்தது.

ஆகவே மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்முன் இந்தக் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments