தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு – சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு !



மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அங்கேயே ராமர் கோவில் கட்ட மத்திய அரசு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள சுமார் 67 ஏக்கர் பகுதியிலோ அல்லது அவர்கள் விரும்பக்கூடிய வேறு எந்தப் பகுதியிலோ மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு அல்லது மாநில அரசால் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தீர்ப்பில் முரண்பாடு இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சன்னி வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments