புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் நூலகத்தை மேம்படுத்த வேண்டும்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உள்ள நூலங்களை மேம்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலை அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரிகள் என நான்கு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது.

இதில் அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்படுகிறது. இந்த கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரிகளில் உள்ள நூலங்களில் போதிய புத்தகங்கள் இல்லை என்றும் தற்போது புதிதாக வந்துள்ள புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கல்லூரி மாணவர்கள் பாடபுத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாடபுத்தகத்தை மட்டுமே படித்தால் அவர்களால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாது.

பொது புத்தகம் படித்தால் சிந்தனை பிறக்கும் என்பார்கள்.அதற்கு ஏற்றார்போல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு தொடர்ந்து புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் பாடங்கள், பொது அறிவு, அறிவியல் அறிவு, அரசியல் அறிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments