புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனற்ற நிலையில், திறந்த வெளியிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளைக்ணறுகளை மூடும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அவா், மேலும் கூறியது:
பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உரிய பாதுகாப்புடன், கான்கிரீட் மூலமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில்,மாவட்டம் முழுவதும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்பட்டுள்ளதை வருவாய், வேளாண், பொதுப்பணி, கல்வித்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவரங்குளம் ஒன்றியத்தில் தோப்புக்கொல்லை, பூவரசக்குடி, சேந்தாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏதேனும் திறந்த வெளியில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின்,அது குறித்து 18004259013 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஊராட்சிகள் உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.