புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (20.11.2019) தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் திரு.ஜார்ஜ் குரியன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

பாரத பிரதமர் அவர்களின் புதிய 15 அம்ச திட்டம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டமானது சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து நிலை கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் இத்திட்டத்தில் 309 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்த வேலூர், திண்டுக்கல், நீலகிரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட11 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வசிப்பிடப் பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையம், சுகாதார நிலையங்கள், சமுதாய கூடம், வணிக வளாகங்கள் மற்றும் இதர கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதே போன்று சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை மாணவ, மாணவியர்கள் முதல் குடிமைப்பணிகள் பயிலும் வரை ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதுடன், வெளிநாடுகளில் கல்வி பயிலும் ஆராயச்சி மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் மூத்த ஆராய்ச்சி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.28,000மும், இளநிலை ஆராய்ச்சி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.25,000மும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மை நலத்துறையில் அரசின் இதுபோன்ற திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் திரு.ஜார்ஜ் குரியன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் டாக்டர். பி.வி.அருண்சக்திகுமார்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு -செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments