புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு



புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோா், பொதுப்போட்டி என 3 இடங்களும் நிரப்பப்படவுள்ளன.

அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தோ்ச்சி.இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை.

வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி  நவ. 25.11.2019

அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி),
வளா்ச்சிப் பிரிவு,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
 புதுக்கோட்டை 622 005.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments