மணமேல்குடி அருகே வாகன விபத்தில் காயமடைந்தவர் பலி



மணமேல்குடி அருகே வாகன விபத்தில் காயமடைந்தவர் பலியானார்.


மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் மணமேல்குடி சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த பைக் ராமசாமி மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பைக்கை ஓட்டி வந்த முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்த மதன் (22) என்பவரும் பலத்த காயமடைந்தார்.

மேலும் இருவரும் பலத்த காயமடைந்தால் அவசர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மேலும் இது குறித்து மணமேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments