ரேஷன் கார்டுகளில் மாற்றம்: சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்



சர்க்கரைக்கான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அரிசி வாங்கும் கார்டு ஆக அதனை மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில்,  சர்க்கரைக்கான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அரிசி வாங்கும் கார்டு ஆக அதனை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ஆன்-லைன் வாயிலாக இன்று முதல் வரும் 26ம் தேதி வரை http://www.tnpds.gov.in  என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரேஷன் கார்டு நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments