சவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி..!



சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் முதன்மை அமைப்பாக ரியாத் தமிழ்ச் சங்கம் விளங்கி வருகிறது.

இவ்வமைப்பின் சார்பில் ரியாத்தில் உள்ள எட்டு இந்தியப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி,மாறுவேடப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட பல்சுவைப் போட்டிகள் ரியாத்தின் மனாக்-கில் உள்ள வலீத் கலையரங்கில் நிகழ்த்தப்பட்டன.

திரளான மாணவர்களும் பெற்றோர் ஆசிரியர்களும் தமிழார்வலர்களும் கூடிக் களித்த இவ்விழாவின் செயல் இயக்குனராக ரியாத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சங்கர் சிறப்பாகச் செயலாற்றி, வரவேற்புரையும் ஆற்றியிருந்தார்.



ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தனது தலைமையுரையில் 'இக்காலக் கட்டத்தில் மாணவர்களிடம் தமிழைக் கொண்டு செல்ல வேண்டுவதின் இன்றியமையாமையையும், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடைபெறும் தமிழருக்கான தொண்டுகளையும் குறிப்பிட்டார்.

நிகழ்வுகளை ஷேக் முஹம்மது ஷாஜஹான் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். ஜாஃபர்சாதிக் சஜ்ஜாவுத்தீன் ஜியாவுத்தீன், பிரணவ், பாவனா ஆகியோர் தன்முனைப்பு தரும் பாடல்களைப் பாடி மகிழ்விக்க மாணவ மாணவியர் நடனங்களும் விழாவில் இடம்பெற்றன.


துணைத்தலைவர் நெளஷாத் அலீ நடுவர்களுக்கான ஒருங்கிணைப்பைச் செய்திருந்தார். ஜியாவுத்தீன் மாறுவேடப் போட்டிக்கான ஒருங்கிணைப்பையும் சேவியர் லியோ, முன்னாள் தலைவர் இம்தியாஸ் அஹமது, விஜி தாமியன் ஆகியோர் வினாடி வினாவுக்கான ஒருங்கிணைப்பையும் செய்தனர்.


இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் துணைத் தலைவர் அருண் ஆகியோர் பரிசுகள் பதக்கங்களின் பொறுப்பை ஏற்றிருக்க, பள்ளிகளின் ஒருங்கிணைப்பை மு.கா. ஷெரீஃப் செய்திருந்தார். வேலுமணி சிறப்பு விருந்தினருக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்த விழாவில் TCS நிறுவனத்தின் சவுதி அரேபிய பஹ்ரைன் நாடுகளுக்கான முதன்மை மேலாளர் சுதீர் ஸ்ரீதரன், ஏர் இந்தியா ரியாத் மண்டல மேலாளர் அ.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகச் சிறப்பித்தனர்.


பொருளாளர் சதீஷ்குமார், சிவராமலிங்கம் ஆகியோர் புரவலர் ஒருங்கமைவை ஒழுங்குறச் செய்தனர்.

முன்னாள் தலைவர்கள் வெற்றிவேல், ஹைதர் அலீ, சஜ்ஜாவுத்தீன், ஜவஹர் சவரிமுத்து ஆகியோர் ஆலோசனைகளை நல்கிய விழாவின் பின்னணியில் செந்தில் குமார், அபூபக்கர், ஜாஃபர் சாதிக், மதி, ஷஃபி, ஜமால், ராம் மோகன், சிக்கந்தர் உள்ளிட்டோர் நிகழ்வு சிறக்க உழைத்தனர்.


செயலாளர் செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததும் நாட்டுப்பண் பாடி விழா நிறைவுற்றது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments