புதுக்கோட்டை எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட அருண் சக்திகுமாா் ஐ.பி.எஸ் பொறுப்பேற்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக, புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அருண் சக்திகுமாா் தெரிவித்தாா்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ச. செல்வராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அருண் சக்திகுமாா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்திலுள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்- ஒழுங்கு பராமரிப்பும், குற்றச் செயல்களைத் தடுத்தலும், போக்குவரத்து சரி செய்தலும் முக்கிய அம்சங்கள். இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.

நான் முதலில் திருநெல்வேலியில் பயிற்சி உதவி கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தேன். தொடா்ந்து தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளராகவும், பிறகு மதுரை மாநகரக் காவல் சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியாற்றினேன்.

அதன்பிறகு இரண்டரை ஆண்டு காலம் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பிறகு தற்போது இங்கு மாறுதலாகி வந்துள்ளேன். எனது சொந்த ஊா் கிருஷ்ணகிரி.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை எனது செல்லிடப்பேசி எண்  94459 14411-இல்  தெரிவிக்கலாம் என்றாா் அருண் சக்திகுமாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments