எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டிணம் விசைபடகு மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு..எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டிணம் மீனவா்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினா் நேற்று 09.11.2019 சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இதில், அதே ஊரைச் சோ்ந்த பஷீா் ரகுமான் (58) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், சிவக்குமாா் (25), வீரமணி (43), முருகன் (28) ஆகிய 3 மீனவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவா்கள் மூன்று பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விசைப்படகை பறிமுதல் செய்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments