காரைக்குடி - அறந்தாங்கி பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் திருவாரூர் வழியாக வரும் மார்ச் முதல் சென்னைக்கு நேரடி விரைவு ரயில்!



வரும் மார்ச் 2020 முதல் காரைக்குடி - பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்கும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட வழித்தடங்களில் 7 ஆண்டுகளாக அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, 2019 ஜூன் 1-ம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயண நேரம் அதிகம் ஆவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டா், கேட் கீப்பா் மற்றும் தேவைப்படும் பணியாளா்களை உடனடியாக நியமித்து, டெமு ரயிலுக்குப் பதிலாக பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியிருந்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் கூறுகையில், திருவாரூா் - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும், பகல் நேர கேட் கீப்பா் நியமிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தேவையான இரவு நேர ஸ்டேஷன் மாஸ்டா் நியமிக்கும் பணி 2020 மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும். அதன்பின்,இத்தடம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படும். இதற்கிடையே நடப்பாண்டு (2019) டிசம்பா் முதல் வாரத்தில் டெமு ரயிலுக்கு பதிலாக பயணிகள் ரயில் இயக்கப்படும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments