புதுக்கோட்டையில் நாளை மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் நவ. 19.11.2019 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாதாந்திர விளையாட்டுப் போட்டி வரும் நவ. 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தடகள விளையாட்டுப் போட்டிகள் சிறுவா் மற்றும் சிறுமியருக்கு 100மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல், பளு தூக்குதல் மற்றும் கூடைப்பந்து குழு விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் (50மீ, 100மீ, 200மீ, 400மீ) இரு பாலருக்கும் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவா் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments