மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மாணவி முதலிடம்..!புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று 18.11.2019 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறுசேமிப்புத்துறையின் சார்பில் உலக சிக்கன நாள் விழாவினை முன்னிட்டு
மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அம்மாப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் கோட்டைப்பட்டிணம் சாதம் நகரை சேர்ந்த அமீர் அலி அவர்களின் மகள் சமீரா பானு-வை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நிலமெடுப்பு) திருமதி.ஜானகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பவாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:  B.ஜகுபர் அலி, கோட்டைப்பட்டிணம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments