புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்



சர்க்கரை மின்னணு குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்ட மின்னணு குடும்ப அட்டைகளில் சர்க்கரை பெறும் (அரிசியை தவிர்த்து) மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போர் தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டைகளாக வகை மாற்றம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பை புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் NPHH-S சர்க்கரை மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போர் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக NPHH ஆக வகை மாற்றம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் ஏதேனும் ஒரு இ.சேவை மையத்தையோ அல்லது அவர்களது வருவாய் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ https://www.tnpds.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பு 26.11.2019 வரை 7 நாட்களுக்கு அமலில் இருக்கும். ஆகவே, இவ்வாய்ப்பினை மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


செய்தி வெளியீடு -செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments