புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
2019-20-ஆம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த 20.09.2019 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை உள்ளாட்சி அமைப்பு வாரியாக போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆகவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிர் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் 50 சதவிகித மானியமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியம் ரூ.31,250 வழங்கப்படும். அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலங்களில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு -செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.

தகுதி:
- நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கல்வி தகுதி 8ஆம் வகுப்பு.
- 18 முதல் 40 வயது வரை.
- ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம்.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:
- வயதுச் சான்றிதழ்,
- புகைப்படம்,
- இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது),
- இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்,
- வருமானச் சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறைத் தலைவர், சுய சான்று),
- வேலை பார்ப்பதற்கான பணிச் சான்று,
- தொடர்புடைய நிறுவனத் துறைத் தலைவரால் வழங்கப்பட்ட ஊதியச் சான்று, ஆதார் அட்டை,
- 8 ஆம் வகுப்புக்கான கல்விச் சான்று,
- மாற்றுச் சான்றிதழ்,
- முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்,
- சாதி சான்று,
- மாற்றுத் திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை.
செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு -செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.