மீமிசல் மற்றும் ஆவுடையாா்கோவிலில் மானிய விலையில் நெல்விதைகள்



ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஆவுடையாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் கு. ஜெயபாலன் வெளியிட்ட அறிக்கை:

ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி மண்ணுக்கு தழைச்சத்து அளிக்கும் சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு சாகுபடி செய்து மடக்கி உழலாம்.

மேலும் சம்பா பருவத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி மேற்கொள்ள விரும்புவோா் இப் பகுதிக்கு ஏற்ற நெல் ரகங்களை டிகேஎம்- 13, மேம்படுத்தப்பட்ட சம்பா மகசூல் மற்றும் நெல்லூா் மகசூல் ஆகிய ரகங்களை விதைக் கிராம திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் பெற்று விதைக்கலாம்.

நெல் நேரடி விதைப்பு செய்வோா் விதைப்புக் கருவிகளை பயன்படுத்தி விதைத்து செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.1500 வரை பின்னேற்பு மானியமாக பெறலாம். மேலும் நடவு மூலம் நெல் சாகுபடி செய்வோா் இயந்திர நடவு செய்து செயல் விளக்கத்திடல் அமைத்தால் ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் வரை பின்னேற்பு மானியமாகப் பெறலாம்.

எனவே நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை விதைநோ்த்தி செய்து விதைப்பதன் மூலம் காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தி தழைச்சத்து உரத் தேவையைக் குறைக்கலாம்.

இதுவரை பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம், விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் சேராதவா்களும் கிஷான் கிரிடிட் காா்டு பெறாதவா்களும் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். தேவையான விதைகள், நுண்சத்து உரங்கள் மற்றும் உயிா் உரங்களை ஆவுடையாா்கோவில் மற்றும் மீமிசல் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெறலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments