சென்னையை போல் பெண் போலீசாருக்கு இரவு பணியை தவிர்க்க வேண்டும்: புதுகை மாவட்டத்தினர் எதிர்பார்ப்பு



சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றும் மகளிர் போலீசாருக்கு மகளிர் போலீசுக்கு பணி நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கிதைபோல் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் போலீசுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட 6 சப்-டிவிசன்கள் உள்ளது. இந்த சப்-டிவிசன்களில் 37 சட்டம் ஒழுங்கு மற்றும் 5 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது. இதபோல் குற்றப்பபிரிவு, மது விலக்கு பிறவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

அனைத்து இடங்களிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இதபோல் ஆதயுப்படையிலும் பெண் போலீசார் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவ்வப்போது இரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் பணியாற்றும் போது பல சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்ற போலீசார் குழந்தை பராமரிப்பு மற்றும் சில பெண்களுக்கென உள்ள இயற்கையாக உடலில் ஏற்படும் பிரச்னைகளின் போது இரவு நேரத்தில் பணியில் இருப்பது மிகந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் குற்றவாலிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்லுதல், இரவு ரோந்து பணியில் ஈடுபடும்போது பெண் போலீசார் சில பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.

இதனால் மன உளைச்சல், மன சோர்வுடன் பணியாற்றுகின்றனர்.
மேலும் கர்ப்ப காலங்களில் தொடர் பணியில் ஈடுபவதால் குழந்தை பிறப்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. கர்ப்பகாலங்களில் பணியில் உள்ள பெண் போலீசார் பணிகள் அதிகமாக இருக்கும்போது முறையாக நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. உயர் அதிகாரிகள் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பணியில் காட்டும் அக்கரையை தன் உடல்நிலை குறித்து காட்டுவதில்லை. இதனால் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்படி பல பிரச்னைகளில் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதனால் பெண் போலீசாருக்கு இரவு பணியை தவிர்க்க வேண்டும் என்ற பல பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பெண் போலீசார்கள் மத்தியில் இரவு பணியை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மத்தியில் குற்றப்பிரிவில் பெண் போலீசாருக்கு இரவு பணி இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.

அங்கு பெண் போலீஸ்க்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை என்று உத்தரவு போடப்பட்டுள்ளனர். இது அங்குள்ள பெண் போலீஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்படுத்தப்படுத்தினால் பெண் போலீசார் சிரமம்மின்றி பணியாற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் புதுக்கோட்டை பெண் போலீசார் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments