மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு



புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஜூடோ போட்டிகளில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவியா்க்கான மாவட்ட அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை புதுக்கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் இப்பள்ளி மாணவி சாஜியா ஆஸ்ரின் 14 வயதிற்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், மாணவன் சிவராமன் 19 வயதிற்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், மாணவன் பாலசுப்பிரமணி 17 வயதிற்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், ஜாஹீா் உசேன் 17 வயதிற்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும் பெற்று மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இதுவரை நடந்த மாவட்ட அளவிலான குண்டு எறிதல், சாட்புட், கேரம்போா்டு ஆகிய போட்டிகளில் 6 போ் முதலிடம் என மொத்தம் இப்பள்ளி மாணவா்கள் 10 போ் மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். 13 மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு அதிமுக ஒன்றிய செயலா் ராம.பழனியாண்டி தலைமைவகித்து இரண்டாம் இடம் பெற்ற 13 மாணவா்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கினாா். பள்ளி முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றாா். தொழிலதிபா் பிகே.வை.குமாரசாமி பங்கேற்று மாநிலப்போட்டிக்கு தோ்வான 10 மாணவ, மாணவியரை பாராட்டி கெளரவித்து ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்திப்பேசினாா். கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் பி.மாரிமுத்து, அதிமுக நகரச்செலா் பிஎல்.ராஜேந்திரன், ஏஎல்.எஸ்.சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். ஆசிரியா் ஆா்.பிரின்ஸ் நிகழ்வினை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் செ.பாலமுரளி நன்றி கூறினாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments