மகாராஷ்டிராவில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு..!



மகாராஷ்டிர மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 50 அடியில் சிக்கியிருந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்புக் குழு பத்திரமாக மீட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் ரிதேஷ் ஜன்ஷேஷ் சோலங்கி இன்று காலை தவறி விழுந்து 50 அடியில் சிக்கியிருந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

தற்போது சிறுவன் ரிதேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிதேஷின் பெற்றோர் உண்மையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ராவில் கூலி வேலைக்காக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments