மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கன்றுக்குட்டி பலி..புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பசுக்கன்று ஒன்று இறந்தது.


கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று  இரவு, மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை அரசு ஆண்கள் தங்கும் விடுதி அருகாமையில் சுற்றி திரிந்த கன்றுக்குட்டி ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது.

அப்பகுதி மக்கள் பசுக்கன்றை உரிமையாளர் யாரும் தேடி வருகிறார்களா என்று சிலமணி நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் வராத காரணத்தினால் சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி மீமிசல் அரண்மனை தோப்பில் அடக்கம் செய்தனர்.

இதற்காக நிதி பங்களிப்பு ரூ.1000 வழங்கிய நல்லுங்களுக்கு இதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என சமூக ஆர்வலர் கூறினார்.


தகவல்: அன்வர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments