கோபாலப்பட்டிணம் VIP நகரில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்..!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் கனமழையால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தேங்கி நின்றது. அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தற்காலிகமாக வாய்க்கால் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது.
கோபாலப்பட்டிணம் VIP நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் மழை நீர் தேங்கியது.இதனால், அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இதனால், VIP நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையொட்டி GPM மீடியா வழிகாட்டுதலின்படி அப்பகுதி மக்கள், தேங்கிய மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அவர்கள் வெளியிட்டுருந்த பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் (18004259017) ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் புகார் தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தற்காலிகமாக வாய்க்கால் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது.

மீண்டும் மழைநீர் தேங்காதபடி, நிரந்தர தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்ற வழிகாட்டிய GPM மீடியாவிற்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். 






தகவல்: கலீல் ரஹ்மான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments