GPM மீடியா செய்தி எதிரொலி: கோபாலப்பட்டிணம் தோப்பு வழியாக மீமிசல் செல்லும் குண்டும், குழியுமான சாலை தற்காலிகமாக சீரமைப்பு..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டிணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம் ஆலமரம் ஈத்கா மைதானம் அரண்மனை தோப்பு வழியாக மீமிசல் செல்லும் சாலை போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமான சாலையில் குளம் போல் மாழைநீர் தேங்கி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். இந்த அவலநிலை பற்றி GPM மீடியாவில் கடந்த 30.10.2019 அன்று கோபாலப்பட்டிணத்தில் குண்டும் குழியுமாக மாறிய சாலை! குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்! நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம் .? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் கடந்த 21.11.2019 அன்று GPM மீடியா பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றும் பதிவிட்டிருந்தோம். 


செய்தி பதிவிடுவது மட்டும் GPM மீடியாவின் வேலை என்று இருந்து விடாமல் அந்த சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் யாரிடம் சென்று புகார் தெரிவிப்பது விரைவில் சாலையை சீரமைக்க எங்கே தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற ஆலோசனைகளை வழங்குகிறது. அந்த ஆலோசனையின் படி அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் அலுவலத்தை தொடர்பு கொண்டும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் மையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு சாலையில் உள்ள பள்ளத்தினை மூட கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் விளைவாக ஊராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமான சாலையை நேற்று 28.11.2019 வியாழக்கிழமை மூன்று டிப்பர் மணல் ஜல்லி கொண்டு JCB மூலம் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்
கூறுகையில் சாலையை தற்காலிகமாக சீரமைப்பு செய்து கொடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, எங்கள் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை மூட சுமார் 6 டிப்பர் மணல் ஜல்லி தேவை ஆனால் தற்பொழுது மூன்று டிப்பர் மணல் ஜல்லி கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக  சீரமைக்கப்பட்டுள்ள சாலையினால் எந்த பயனும் இல்லை என்றும் இன்னும் மூன்று லாரி மணல் ஜல்லி கொண்டு உடனடியாக சரியான முறையில் சீரமைத்து தந்தால் மட்டுமே எங்கள் பகுதி சாலையில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும் என்றார். 

அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு GPM MEDIA மற்றும் பொது மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments