R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் (மேஜை,நாற்காலி) அர்ப்பணிப்பு விழா.!




R.புதுப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா , மீமிசல் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று 04.11.2019 திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் கல்வி சீர் ( மேஜை, நாற்காலி ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லீம் கிராம ஜமாஅத் தலைவர் பிரியம் முகம்மது அப்துல் காதர் தலைமை தாங்கினார். ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது, ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அல் அமீன் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் கலந்தர் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய நல்லாசிரியர் கல்யாணம் சுந்தரம் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். 

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கலந்தர் பாட்சா, ஆர்.புதுப்பட்டிணம் ஊராட்சி செயலாளர் மதி, ரமேஸ், பிரபு மற்றும் ஜெயக்குமார் நாட்டாணி புரசக்குடி கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு மேஜை மற்றும்  நாற்காலியியை வழங்கினர்.

மேலும் இவ்விழாவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும், விழாவில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மரக்கன்றுகளை வழங்கினர்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள LKG மற்றும் UKG படிக்கக் கூடிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ளது போன்று சுமார் ரூ.98,000 ஆயிரம் மதிப்பிலான ஆறு நார்காலிகள் மற்றும் ஒரு மேசை அடங்கிய 15 செட் வழங்கப்பட்டது. மேலும் இதை வழங்குவதற்காக நிதி உதவி வழங்கிய வெளிநாட்டுவாழ் முன்னாள் மாணவர்கள் , உள்நாட்டு வாழ் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

 கூட்டத்தின் இறுதியில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் அஜ்மல் கான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.























தகவல்: OMS. நூர் முஹம்மது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments