ஏம்பக்கோட்டை மக்கள் மன்றம் & இளைஞர் அணி சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் அருகாமையில் உள்ள  ஏம்பக்கோட்டையில் மக்கள் மன்றம் & இளைஞர் அணி சார்பில் நிலவேம்பு கசாயம்  (03.11.2019) அன்று மாலை 4 மணியளவில் வழங்கப்பட்டது.


ஏம்பக்கோட்டை தெருக்கள் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.

இதன் மூலம் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்:

நிலவேம்பு கசாயத்தில் 9 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேங்குடல், பார்படாகம், சுக்கு, மிளகு, போரை கிழங்கு ஆகிய 9 சேர்ந்த கூட்டு மருந்துதான் நிலவேம்பு கசாயம். இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கண்டுபிடித்த மருந்தாகும். மத்திய அரசின் மருந்து அழகு சாதன சட்டத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள முதலாவது பட்டியலில் நில வேம்பு குடிநீர் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அது தெரியாமல் பேசுகிறார்கள்.

சித்த மருந்துகளை பற்றி பேச அலோபதி மருத்துவர்களுக்கு உரிமை கிடையாது. நிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது. மலட்டு தன்மை ஏற்படும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் உள்ளவர்கள் 3 வேளையும் 5 நாட்கள் குடிக்கலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் 3 நாளுக்கு ஒரு வேளை மட்டும் குடித்தால் போதுமானது. பெரியவர்கள் 50 மில்லியும், ஒரு வயது முதல் 11 வயதுடையவர்கள் 15 முதல் 20 மில்லி அளவும் குடிக்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. 9 மூலிகைகள் அடங்கிய கூட்டு சுவையுடன்தான் வழங்க வேண்டும். தனி சுவையாக கொடுக்க கூடாது.

இந்த கசாயத்தை தயாரித்த 3 மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அவை பயனற்றதாகி விடும். மீண்டும் புதிதாக கசாயம் தயாரிக்க வேண்டும், எனவே பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குறித்து பயப்பட தேவையில்லை. தயக்கம் இல்லாமல் குடிக்கலாம்.

தகவல்:  முகம்மது கியாஸ்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments