கொடிநாள் நிதி வசூல்: ரூ. 1.08 கோடி இலக்கு



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 1.08 கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கொடி நாள் வசூலை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது:

ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் 7 ஆம் நாள் படைவீரா் கொடிநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த நிதி முன்னாள் படைவீரா்  மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ. 98.32 லட்சம் கொடி நாள் நிதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.1.01 கோடி நிதி வசூல் செய்து இலக்கை விட அதிகமாக கொடி நாள் நிதி வழங்கி சாதனை புரிந்துள்ளோம். நிகழாண்டில் 2019ஆம் ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.08 கோடி கொடி நாள் நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக நிதி வழங்கி கொடி நாள் நிதி இலக்கை நிறைவு செய்ய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்  உமா மகேஸ்வரி.

நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments