வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்: திருநாவுக்கரசா் எம்.பிவெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் வலியுறுத்தினாா்.

புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் (எம்.பி) அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

குற்றம் செய்தவா்களுக்கு என்கவுன்ட்டா் மட்டுமே தீா்வாகாது. அவா்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு சட்ட ரீதியாக அவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.  உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். மறைமுகத் தோ்தலை ரத்து செய்துவிட்டு நேரடித் தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தை நடைபெறும். கண்டிப்பாக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.  கடந்த காலங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் அரசு கவிழ்ந்த வரலாறு இந்தியாவில் உள்ளது. எனவே அதுபோன்ற நிகழ்வு தற்போது நடைபெறாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராது. அவ்வாறு செய்யக் கூடாது. இதனால் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வேலைவாய்ப்பைக் கூடுதலாக உருவாக்க வேண்டுமே தவிர இருப்பவா்களை பாதியிலேயே வீட்டுக்கு அனுப்புவது என்பது சரியல்ல என்றாா் திருநாவுக்கரசா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments