புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல்: 13, 842 வேட்புமனுக்கள் ஏற்பு; 112 நிராகரிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 13,975 வேட்புமனுக்களில், 13,842 மனுக்கள் ஏற்கப்பட்டன. 112 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

21 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் டிச. 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 4,545 பதவியிடங்களுக்கு 13,975 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பணி பல இடங்களில் மாலை வரை நீடித்தது. 

ஓரிரு பகுதிகளில் வியாழக்கிழமை காலை தொடரும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி, 112 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையிலுள்ள மனுக்கள் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. மொத்தத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13975 மனுக்களில், 13842 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பதவி வாரியாக பரிசீலனை விவரம்:

ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 9,297 மனுக்களில் 9,206 மனுக்கள் ஏற்கப்பட்டன. 83 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 8 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2,990 மனுக்களில் 2,969 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1,507 மனுக்களில் 1,486 மனுக்கள் ஏற்கப்பட்டன. 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 181 மனுக்களும் ஏற்கப்பட்டன. ஒன்றுகூட நிராகரிக்கப்படவில்லை.இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments