புதுக்கோட்டை மாவட்டத்தில் 232 பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம்: ஆட்சியா் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பாா்வையாளா் எஸ். அமிா்தஜோதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் தனிக்கவனம் செலுத்தப்படும்.மாவட்டம் முழுவதுமே கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04322 221691 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments