குடியுரிமை சட்டத்துக்கு அதிமுக ஆதரவு கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது அதிமுகவில் இருந்து விலகல்
கடையநல்லூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற ஆதரித்து அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததை கண்டித்து கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது  அக்கட்சியிலிருந்து இருந்து விலகினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுகவில் கடையநல்லூர் சட்டமன்ற  உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து முதலில் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு  செயலாளராக பதவி வகித்தார். தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவரிடம் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய மதவாத அரசின் ஊதுகுழலாக செயல்படுவதாகவும், மேலும்  சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல்  செய்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்த சட்டத்தை நிறைவேற்ற அதிமுக எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்ததை கண்டித்து அதிமுகவிலிருந்து  விலகுகிறேன் என்று கூறினார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments